11 September 2010
வாப்பாவுடனான பெருநாள்....!!!
ஒரு கடமையைபோல
சாதாரனமாய்
கழிந்து விடுகிறது
நமது பெருநாள்கள்.....
மருதாணி வாசம்...
தெருவேகிலும்.............
பட்டாசுச்சத்தம்!
செவிகளில் மணக்கும்
தக்பீர் வாசம்...
எதிலும் ஒட்டாமல் என் மனசு...
தொழப்போகமுன்னரே.....
மஞ்சள் சோறும்
கோழிக்கறியுமாய்
ஒன்றாய் அமர்ந்து....
சாபிட்டதெல்லாம்
ஒருகாலம்.....
பெருநாள் காசுக்காய்
உங்களிடம் காத்துக்கிடந்ததில்...
சேர்ந்த காசுகளை
முழுத்தாளாய்...
உங்களிடமே;
மாற்றி எடுப்பதிலும்...
ஒரு சந்தோசம் இருந்தது வாப்பா !!!
இப்போதெல்லாம்;
நானே சம்பாதித்த காசு
கையிலிருக்கிறது.....
பழைய சந்தோசங்களில்லை....
வெறும் புத்தாடைகளோ;
மருதாணி வாசமோ...
விதவிதமான
பலகாரங்களாலோ;
காகித நோட்டுக்களாலோ..;
அழகாக்கி விடமுடியாது...
வாப்பாவின் இருப்பைபோல;
ஒரு பெருநாளை....
ஒவ்வொரு
பெருநாள் தொழுகையின்
பின்னாலும்...
ரகசியமாய் அழும்...
உம்மாவின் கண்நீருக்குப்பின்னால்
ஆயிரம் துயரங்களிருக்கும் ....
எப்படியோ.......
-------------------------
----------------------
வாப்பா!
கலைக்கப் படாத
புத்தாடைகளைபோல....
பத்திரமாய் இருக்கிறது....
பெருநாட்களிலான;
உங்களின் நினைவுகள்
றஹீமா பைஷல்
Subscribe to:
Post Comments (Atom)
தங்களின் வாப்பா உடன் கொண்டாடிய
ReplyDeleteஅந்த பெருநாள் நினைவுலகை அழகாக
கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள்.
அருமை.
ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.
i can feel thissssssss
ReplyDelete//தமிழ் பிரியன் said...
ReplyDeleteNice! //
Thanks
abul bazar/அபுல் பசர் said...
ReplyDelete//தங்களின் வாப்பா உடன் கொண்டாடிய
அந்த பெருநாள் நினைவுலகை அழகாக
கவிதையாய் சொல்லி இருக்கிறீர்கள்.
அருமை.
ஈத் பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி.//
//
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் அபுல் பசர் ....!!
.....பெருநாள் வாழ்த்துக்கள்.....!!!
feroz said...
ReplyDelete//i can feel thissssssss //
Thanks a lot for ur comment...
ரஹீமா மனதை தொட்டது கவிதை இப்பொழுது எனது மகள் அதனைத்தான் செய்கிறாள்.
ReplyDeleteநன்றி அப்துல்லாஹ்!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றிகள்