03 September 2011
ஹிஜாப்....!!!
பத்திரமயிருக்கிறேன்...
எனக்குள் - நான்
மிக மிகப்பத்திரமாய்....!!!
எச்சில் இலைமீதான
இலையான்களைப்போல
எவர் கண்ணும்
என்னை
அசிங்கப்படுத்துவதும் இல்லை...!!!
ரீக்கடை தாண்டி
நடந்து போகையில்...
எல்லோர் கவனமும் பறித்து
என்னைப்பற்றியே
விமர்சித்துத் தொலைத்து
பாவங்களால் நிரம்பிவழிய...
வாய்ப்பளிப்பதில்லை- நான்...!!!
என்னைப்
பின்தொடர்ந்து வா...
விசிலடி..!!!!
கேலிசெய்....!!!
என யாரையும்...
என் உடைகளால்
சீண்டிவிடுவதில்லை நான்...!!!
வகுப்பறைகளிலும்...
பாடப்புத்தகம் மீதான
அடுத்தவர் கண்களை
ஒருபோதும்
கிழித்துப்போடுவதில்லை-நான்!!!
விழிகளால் ஊரே ரசித்து...
கழித்துப்போட்ட
எச்சில் பண்டமாய்
எப்போதும் இருந்ததில்லை - நான்!!!
அல்லாஹ்வின் கட்டளைகளில்;
கணவனின் கண்களில்;
நான் மிகப்பெரும்
அழகியாய்
உயர்ந்துநிற்கிறேன்...!!!
அறியாமையினால்;
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிரார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!!
பாவம் அவர்கள்....;
.......................
அநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!
Subscribe to:
Post Comments (Atom)
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅழகுக் கவிதை.
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது : http://www.satyamargam.com/1763
ஒவ்வொரு வரியை படிக்கும் போதும் எனக்குள் அப்படி ஒரு இனம் புரியாத ஒன்று.
ReplyDeleteஅழகான கவிதை. புகழ்வதற்கு வார்த்தைகள் இல்லை.
//ழ்அறியாமையினால்;
ReplyDeleteஇவர்கள்தான்
உரத்துக்கூவுகிரார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று!!!!!!!!! ///
இப்படி சொல்ல காரணம், அவர்கள் வீட்டு பெண்கள் அன்னிய ஆண்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் போது, நம் பெண்கள் மூடிக் கொண்டு போவதை பார்க்கும் போது வரும் வயிற்றெரிச்சலே தவிர வேறில்லை
என் வலைப்பூவில் தங்கள் கவிதையை நயந்த கவிதையாய் இணைத்துள்ளேன்.
ReplyDeletewww.kalaimahanfairooz.blogspot.com
மாஷா அல்லாஹ்...கவிதை அருமை சகோ..ஒவ்வொரு வரியும் தெரிவு செய்த வரிகள்..
ReplyDeleteஅல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்
ஹிஜாப் குறித்து எனது பார்வை..
http://sunmarkam.blogspot.com/2010/11/blog-post_29.html
அன்புடன்
ரஜின்
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteமாஷா அல்லாஹ்...அருமையான பகிர்வு.
இறைவன் உங்கள் கல்வி அறிவை மென்மேலும் அதிகரிக்க செய்வானாக...ஆமீன்...
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅனைவரது கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteஅநாவசிய பார்வைகளை....
அந்நியரின் விமர்சனங்களை ....
அனாச்சாரங்களை ....
அடக்கிவைக்கும்
அதிஉன்னத ஆயுதம்....
ஹிஜாப்
என்பதை அறியாமல்....!!!!
இவர்கள்தான்
உரத்துக்கூவுகிரார்கள்....
ஹிஜாப்
அடக்குமுறையென்று
அருமையான வரிகள்.
வாழ்த்துகள் சகோதரி.
எஸ்.பாயிஸா அலி
கிண்ணியா
அருமையான பகிர்வு.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி.
எஸ்.பாயிஸா அலி
கிண்ணியா
எஸ்.பாயிஸா அலி
Deleteகிண்ணியா //
வ'அலைக்கும்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
உங்கள் கருத்துக்களுக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோதரி..
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி...
ReplyDeleteநான் மிகவும் ரசித்த கவிதை....
ரசித்ததோதுடு நில்லாமல் என் வலைபக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்...!!
http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_4753.html
வ'அலைக்கும்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
Deleteஉங்கள் கருத்துக்களுக்கும்,பகிர்வுக்கும் நன்றிகள் சகோதரி
This comment has been removed by the author.
ReplyDelete