13 July 2011
பட்டிணி.....!!!
பசிப்பதாய்ச்சொல்லி ...
உரத்தழவும்
திராணியற்று....
உட்கார்ந்திருக்கிறது...
ஒரு _ ஜீவன்..!!!
''தங்க மகள் !
அச்சா மகள்..!
ஆ......க் காட்டு
ஒருவாய் தின்னென்று''
சோறூட்டும்
உம்மா நமக்கு....!!!!
''இராச்சோறு
தின்னாவிட்டால்
யானைப்பலம்
குறையுமென்று''
தூக்கத்தில் எழுப்பி....
உணவூட்டும்
வாப்பா_ நமக்கு...!!!!
பிடித்த கறி
சமைக்காவிட்டால்...
பிடிவாதமாய்
பட்டிணிகிடந்தே....
உம்மாவை நோகடிக்கும் ..
திமிர் _ நமக்கு...!!!
எத்தனை நாள்
ருசிருசியாய்
சமைத்துப்போட்டும்
கொஞ்சமாய் _ ஒருநாள்
உப்புக்குறைந்தாலும்...
''என்ன கறி??'' என்று
முகம் சுழிக்கும்
மனம் - நமக்கு....!!!
கடைத்தெருவில்;
கண்டதையெல்லாம்
தின்றுதள்ளி...
கொலஸ்ரோலும்...
சீனியுமாய்.....
வியாதிகளும்_நமக்கு....!!!
அவர்கள்...
இல்லாமல் அழுகிறார்கள்....!!!!
நாங்கள் ...
இருப்பதனால் அழுகிறோம்...!!!
யா...அல்லாஹ் ..
அவர்களுக்கும்..
எங்களுக்கும்
உணவில்
பரக்கத்துச் செய்வாயாக....!!!!
ஆமீன்....!
Subscribe to:
Post Comments (Atom)
இதுவே போதும் என்றது ஏழை மணம்!
ReplyDeleteஇன்னும் வேண்டும் என்றது பணக்கார மணம்!