07 February 2011

தேநீர்க்கோப்பை ....!!!




வெறும் சுடுநீரிலும்......
தேயிலைச்சாற்றிலும்...
சீனியும் இல்லை
ஒரு - தேநீர் கோப்பையின் சுவை...!!!

ஊசியாய்க்குத்தும்
குளிர்காற்றின் நடுவில்...
உன் - கரம் கோர்த்தபடி....
நடந்து....;
சாலையோரத்துக் கடைமுற்றத்தில்
பருகும்
தேநீரில் இருக்கிறது !!!

ஒவ்வொரு விடியற்காலையிலும்...
ஒரு கோப்பை தேநீரோடு.
உன்னை சந்திப்பதில்
இருக்கிறது.... !!!

நீ அறியாமல்
ரகசியமாய்....
ஒரு மிடர் பருகி...
மீதியை உனக்களிப்பதில்
இருக்கிறது.....!!!

நீ குடித்த
மிச்சத் தேநீரின்...
மீதித்துளியை;
பருகிவிட்டுப்போவதிலும்
இருக்கிறது.....!!!

ஒவ்வொருநாள் மாலையிலும்...
உனக்காக காத்திருப்பதிலும்....
சுவாரசியமாய் பேசிக்கொண்டே
பருகுவதிலும் இருக்கிறது...
தேநீரின் சுவை...!!!!

இப்போதெல்லாம்
நீயில்லா தனிமைகளில்...
ஆறிக்கிடந்து.........;
அநாவசியமாய்
இறங்கிச்செல்கிறது....
ஒரு தேநீர் கோப்பை...!!!

உனது அருகாமையைபோல்....
.......................
வெறும்....சுடுநீரால்...
தேயிலைச்சாறினால்..
இல்லை...
சீனியினாலோ
சுவையாகி .விடுவதில்லை...
ஒரு தேநீர் கோப்பை........!!!

6 comments:

  1. கவிதை அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி ஆயிஷா.

    ReplyDelete
  3. கவிதைகள் எல்லாம் நல்லாயிருக்கு. நம்ம ஏரியாவுக்கும் வந்து போங்க....
    http://faaique.blogspot.com/

    ReplyDelete
  4. Please remove the word verification. its making trouble to write comments

    ReplyDelete